பிரபல எழுத்தாளர் "நாடோடி' அவர்களை பெங்களூரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களூருக்குப் போகும்படி கேட்டுக் கொண்டார்.
நாடோடி பெயரால் "ரிசர்வ்' செய்யப்பட்ட டிக்கெட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர். "நாடோடி' என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், ""நாடோடி வாழ்க'' ""வாழ்க'' என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக்கொண்டேன்.
அறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹25
Tags: arignar, annavin, naadodi, அறிஞர், அண்ணாவின், நாடோடி, , -, Arignar, Annavin, Naadodi, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்