• அன்பின் வெற்றி டால்ஸ்டாய்-Anbin Vetri Dolstaai
பகுத்தறிவுள்ளவன் தன் தனி இன்பத்திற்காக வாழ்க்கையைக் கழித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் அவனுக்கு எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவு உணர்ச்சி அவனுக்கு வேறு இலட்சியங்களையும் நோக்கங்களையும் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரண்டிற்கும் நடுவே அவன் திண்டாடித் துயருறுகிறான்.மனிதன் ‘நான்’ என்று தன் மிருக இயல்பை கருதுகிறான். மற்றோர் இயல்பான பகுத்தறிவு உணர்ச்சியும் ‘நான்’ என்று சொல்லுகிறது. முதலாவது ‘நான்’ கீழ்த்தரமானது, இரண்டாவது ‘நான்’ உயர்வானதைக் குறிக்கிறது. மிருக இயல்பை ‘நான், என்று கொண்டால், உயிர் வாழ்வதிலும் இன்பங்களிலும் ஆசை ஏற்படுகிறது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. நிறைவேற்ற முயன்றால் துன்பமே ஏற்படுகிறது. பகுத்தறிவு உணர்ச்சியை ‘நான்’ என்று கொண்டால், உயிர் வாழ்வதில் ஆசை யில்லாமற் போகிறது. ஏனெனில், ஒருவன் தனக்கு மட்டும் இன்பம் தேடிக்கொண்டிருத்தல் அறிவீனம் என்று தெரிகிறது. இந்தக் குழப்பமான நிலைக்குத் தான் இக்காலத்துப் போலி ஆசிரியர்கள் நம்மைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் மனிதன், அறிவுக்குப் பொருத்தமில்லாத மிருக இயல்பைத் தள்ளி விட்டால், வாழ்க்கையில் வேறு எதுவுமே மிஞ்சவில்லை யென்று எண்ணுகிறான். உண்மை என்னவென்றால், தனி மனிதனின் தேவைகளை ஒதுக்கிய பின்பு மிஞ்சியிருப்பதே வாழ்க்கையாகிறது. ஒளி இருளில் பிரகாசிக்கிறது. ஆனால் இருள் அதை உணர முடியவில்லை.ஆனால் நன்மையான மார்க்கம், சத்திய மார்க்கம் என்று கருதப்படும் ஆன்றோர்களின் போதனை உண்மையான வாழ்க்கையை முன்பே விளக்கிக் காட்டியிருக்கிறது. தனி நலனை நாடுதல் ஏமாற்றத்தில் முடியும் என்றும், உண்மையான நலனை, இவ்வுலகிலேயே. இப்பொழுதே, அடைய முடியும் என்றும் அது எடுத்துக்காட்டுகிறது. நவ நாகரிகத்தின் அபரிமிதமான தேவைகளால் மயக்கமடையாத சாதாரண மக்களின் உள்ளங்கள் தாமாகவே இந்த நன்மையை நாடிச் செல்கின்றன. மிருக வாழ்வின் நன்மைகளை எவ்வளவுக் கெவ்வளவு தியாகம் செய்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு இந்த நன்மை பெருகுகிறது.வாழ்க்கையின் முரண்பாடுகள் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் உணர்ச்சியை எல்லா மனிதர்களும் அறிவார்கள் ; அதுவே மனிதனுக்கு எல்லையற்ற நன்மையை அளிக்கின்றது ; அதுதான் அன்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அன்பின் வெற்றி டால்ஸ்டாய்-Anbin Vetri Dolstaai

  • ₹30


Tags: anbin, vetri, dolstaai, அன்பின், வெற்றி, டால்ஸ்டாய்-Anbin, Vetri, Dolstaai, தமிழில்:ஜெயசிம்ஹன், கவிதா, வெளியீடு