நவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் அதிர்வுகளை உருவாக்கிய நாவல் இ.பி. ஸ்ரீகுமாரின் 'அழியா முத்திரை.' பொருளாதார நிலையில் உச்சத்திலிருக்கும் உபரி வர்க்கத்தினர், உடலுழைப்பால் துவண்டுபோகும் தொழிலாளிகள், நித்ய கர்மம் போல் அலைந்துதிரிய விதிக்கப்பட்ட 'தொழில் பிச்சைக்காரர்'களை மையமாகக்கொண்ட இந்த நாவல், அதீதக் கற்பனைப் புனைவுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புனைவுகளின் பின் முகம்காட்டும் யதார்த்தத்தின் குரூரம் - சரியும் தவறும், நெறியும் நெறியின்மையும் பிரித்தறிய முடியாமல் கலந்துபோன பெரும் சமூக அவலம் - அறிவியலின் அதிவேகப் பாய்ச்சலுடன் கைகோர்த்து வரும் உலகமயமாக்கலின் ஆதிக்கம் குறித்து நம்மைத் தீவிரமாகச் சிந்திக்கவைக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

aliyaa muthirai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹275


Tags: aliyaa muthirai, 275, காலச்சுவடு, பதிப்பகம்,