ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன.
வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம்.
'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது.
இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும் பயன்படும் ஆயுர்வேத ரகசியத்தை மிகவும் எளிதாகப் புரியும்படி எழுதியிருக்கிறார் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.
நீண்ட ஆயுளோடு நோயற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்
- Brand: டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: aayul, valarkum, ayurvedham, ஆயுள், வளர்க்கும், ஆயுர்வேதம், டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன், விகடன், பிரசுரம்