ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தார். தம்முடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘Zoological Regression’ பற்றிக் கூறுகையில் “ஊகிக்கும் திறனுடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த இக்கதைகளை எழுதினேன். அதன் பிறகு மீண்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. என்னுடைய அடுத்த தொகுதியில் நானே படித்து மகிழும் கதைகள் மட்டுமே இடம் பெற்றன” என்கிறார். “எதுவும் நுட்பமாக, தெளிவாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். சந்தேகத்திற்கே இடம் இருக்கக்கூடாது. என்னுடைய கதைகளில் பல சம்பவங்கள் விசித்திரமாக இருந்தால்கூட பாத்திரங்களை நான் ஸ்தூலமாகவே படைக்கிறேன்” என்கிறார் ஸோரன்டினோ. ‘The Best of All Possible World’, ‘Stories of the Liar’, ‘Sanitary Centennial’ என்பவை இவரது பிற சிறுகதைத் தொகுதிகள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aattukkuttikal Alikkum Thandanai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹100


Tags: Aattukkuttikal Alikkum Thandanai, 100, காலச்சுவடு, பதிப்பகம்,