• Aatkolli Vilangu /ஆட்கொல்லி விலங்கு
அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன. ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது? அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது? வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்? ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது? ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது? விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்? காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்கும்? தேடிப்போன விலங்கு கண்முன்னால் திரண்டு நிற்கும் அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது? அடுத்து எந்த விலங்கு தோன்றுமோ எப்படித் தாக்குமோ என்று அச்சத்தில் உறைந்துகிடக்கும் கிராமத்து மக்களை மீட்டெடுக்க கென்னத் ஆண்டர்சன் தனது வேட்டையைத் தொடங்குகிறார். மனிதன் இயற்கையின்மீது பெரும் போர் தொடுக்கிறான். இயற்கை பதிலுக்கு மனிதனை வேட்டையாடத் தொடங்குகிறது. இந்தப் போரில் வெல்லப்போவது யார்?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aatkolli Vilangu /ஆட்கொல்லி விலங்கு

  • ₹200


Tags: , SP. Chokkalingam /SP. சொக்கலிங்கம், Aatkolli, Vilangu, /ஆட்கொல்லி, விலங்கு