• Aanmiga Arasiyal / ஆன்மிக அரசியல்
ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கான தரத்துடன் ஆதாரங்களுடன் இந்த நூலில் ரங்கராஜ் பாண்டே தொகுத்தளித்திருக்கிறார். ஆகமங்கள் தொடர்பாக நவீன கால முனைவர் பட்டம் பெற்ற தீபாதுரைசாமி, மரபார்ந்த சைவ ஆகம பண்டிதர் குளித்தலை இராமலிங்கம் என இரு தரப்பு நிபுணர் களிடம் நூலாசிரியர் மேற்கொண்ட உரையாடல் இந்த நூலுக்கு மகுடமாகத் திகழ்கிறது. பூணூல் அறுப்பு, நாத்திகர்களுக்குக் கோவிலில் என்ன வேலை, அறநிலையத்துறையின் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்தர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும், அனைத்து மதத்தினருக்கும் ஆலயத்தில் நுழைய உரிமை உண்டா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி அச்சமின்றி விவாதிக்கிறார் ரங்கராஜ் பாண்டே. சட்ட திட்டங்களில் நம்பிக்கைகொண்டவர்கள், மதச்சார்பற்ற நேர்த்தியான நிர்வாகத்தில் அக்கறைகொண்டவர்கள் ஆகியோரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Aanmiga Arasiyal / ஆன்மிக அரசியல்

  • ₹200


Tags: , ஆர்.ரங்கராஜ் பாண்டே, Aanmiga, Arasiyal, /, ஆன்மிக, அரசியல்