இந்நாவல் படித்து முடித்ததும் ஏதோ ஒரு அமைதி என்னைச் சூழ்ந்தது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன். இப் பிறவியில் நான் இதுவரை செய்திருக்கும் சிறு சிறு குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டுப் பார்க்க, அம்மாடா! அந்த அளவுக்கு பெருங்குற்றம் எதுவும் இதுவரை செய்யவில்லை என்று ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. இனி கண்டிப்பாய் தெரியாமல்கூட தவறு செய்யத் தோன்றாது. மொத்தத்தில் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம் கலந்த ஆவல் குபுக்கென்று முகிழ்கிறது. அடுத்த ஜென்மத்தில் நான் நாயாகப் பிறப்பேனா? பிறந்து என் மிச்சக் கடனைத் தேர்ப்பேனா? தீர்க்க வேண்டும்.
அன்புடன்
வித்யாசுப்ரமணியம்
Tags: aalamaram, ஆலமரம்-Aalamaram, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்