ஆ ! கதை ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்ததோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்தத் தகவல்களைக் கட்டுரையில் தந்தபோது, அந்த அனுபவப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார். சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.
Tags: aah, ஆ..!-Aah, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்