• அள்ள அள்ளப் பணம் 3-Futures and Options
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F).அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அள்ள அள்ளப் பணம் 3-Futures and Options

  • ₹170


Tags: , சோம. வள்ளியப்பன், அள்ள, அள்ளப், பணம், 3-Futures, and, Options