• 1877 Thathu Varuda Pancham/1877 : தாது வருடப் பஞ்சம்
உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி நிற்கும் நூல்களில் ஒன்று, வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேய எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும் உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தைக் கூர்மையாகவும் நேர்மையாகவும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர். உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத விநோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியைக் குத்திக் கிளறிவிடும் வரலாற்றின் கதையும்கூட.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

1877 Thathu Varuda Pancham/1877 : தாது வருடப் பஞ்சம்

  • ₹250


Tags: , வில்லியம் டிக்பி தமிழில் வானதி, 1877, Thathu, Varuda, Pancham/1877, :, தாது, வருடப், பஞ்சம்