• The Millionaire Fastlane: Crack the Code to Wealth and Live Rich for a Lifetime
வழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்! செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளது. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், உங்கள் கனவுகளை நிர்மூலமாக்குகின்ற மெதுவான பாதையில் நீங்கள் பயணிப்பதையே நிதி ஆலோசகர்களும், பணத்தைக் குவிப்பதைப் பற்றி எழுதுகின்ற நூலாசிரியர்களும் ஊக்குவிக்கின்றனர், அத்தகைய பயணத்தைப் பற்றியே அவர்கள் போதித்து வருகின்றனர். நீங்கள் உங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையில் சேர்ந்து, மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பணத்தை மிச்சப்படுத்தி, அதை ஓர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நாற்பது ஆண்டுகள் கழித்து அதன் பலனை அறுவடை செய்து, தள்ளாத வயதில் செல்வந்தராக ஆவதுதான் அந்த மெதுவான பாதைத் திட்டம். இவ்விரண்டு பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்நூல் கீழ்க்கண்டவற்றுக்கு பதிலளிக்கிறது: 40 ஆண்டுகால வேலை, ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நிதி முதலீடு, பெரும் சிக்கனம் போன்ற உத்திகள் ஏன் உங்களை ஒருக்காலும் பணக்காரராக ஆக்காது? ‘செல்வத்தைக் குவிப்பது எப்படி’ என்பதை விளக்குகின்ற நூல்கள், அந்த நூலாசிரியர்களைத்தான் பணக்காரர்களாக ஆக்குமே அன்றி, உங்களை அல்ல. பங்குச் சந்தையில் கிடைக்கும் 8 சதவீத இலாபத்திற்கு பதிலாக, உங்களுடைய சொத்தின் நிகர மதிப்பை 400 சதவீதமாக அதிகரித்துக் கொள்வது எப்படி?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

The Millionaire Fastlane: Crack the Code to Wealth and Live Rich for a Lifetime

  • ₹450


Tags: the, millionaire, fastlane, crack, the, code, to, wealth, and, live, rich, for, a, lifetime, The, Millionaire, Fastlane:, Crack, the, Code, to, Wealth, and, Live, Rich, for, a, Lifetime, MJ DeMarco (Author) PSV Kumarasamy (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்