ஆன்மீக கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து, நெஞ்சுக்கு நிம்மதி தரும் பல கோயில்கள், நமது நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
தவயோக ஞானிகளாலும் சித்தர்களாலும் பாடல்பெற்ற தலங்கள் அருளொளி வீசி, பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் விகடனில் 'நிம்மதி தரும் சந்நிதி' என்ற தலைப்பில் ஆன்மீகத் தொடர் ஆரம்பித்தபோதே, அதற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது.
'திருத்தலங்களுக்கு நேரில் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் பக்தர்களிடம் குடிகொண்டிருந்தாலும், எல்லா ஆலயங்களுக்கும் நேரில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் அமைகிறது. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும், எந்தக் கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றும், அந்தக் கோயிலின் விசேஷ பூஜைகள் எப்போது நடக்கும் என்றும் அறியப்படும் விவரங்கள் குறைவுதான்.
மக்களைக் கவர்ந்த பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்த கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, கோயிலைப் பற்றிய புராணக் கதைகளுடன், கர்ணப் பரம்பரை கதைகளையும் இணைத்து மேம்படுத்திக் கட்டுரைகளாகச் செதுக்கியிருக்கிறார். இவருடைய எழுத்து, வாசகர்களுக்கு நேரில் சென்று திருத்தலங்களைத் தரிசித்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கம்பீரமான ராஜகோபுரங்கள், கலைநயமிக்க கலைத் தூண்கள், நெஞ்சை அள்ளும் சிற்பங்கள் ஆகியவற்றைத் தூரிகை கொண்டு தத்ரூபமாகச் செதுக்கிய ஓவியர்கள் பத்மவாசன், ஷிவராம் இருவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ஓவியங்களை வரைந்து தந்ததை மறக்க முடியாது.
'நிம்மதி தரும் சந்நிதி' கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும்' என்ற வாசகர்களின் ஒருமனதான வேண்டுகோளின்படி, முதல் தொகுதியாக 29 திருத்தலங்கள் பற்றிப் புத்தகமாக வெளியிட்டோம். அதற்கு வாசகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்புதான், இப்போது இரண்டாவது தொகுதியையும் வெளியிட வைத்திருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன் பெறுவதோடு அல்லாமல், உங்கள் இல்லத்திலும் வைத்துப் பாதுகாத்தால், வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்குச் சிறந்த ஆன்ம பலத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2)
- Brand: கிருஷ்ணானந்த சுந்தர்ஜி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹65
-
₹55
Tags: nimmathi, tharum, sannithi, part, 2, நிம்மதி, தரும், சந்நிதி, (பாகம், 2), கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, விகடன், பிரசுரம்