அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம் ,
திக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்...
வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை...
காப்பாற்ற வேண்டிய
நேரங்களில் ஓய்வெடுக்க
போய்விடுகிறார் கடவுள்...
புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது...
பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது...
மனித மனங்களிலிருந்து மனிதநேயம்
மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது...
மனதை சுத்தப்படுத்த ஒருநொடி
போதும் அந்த ஒருநொடியை
செலவு செய்யத்தான் நமக்கு
மனமில்லை...
நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1 - Nilaithu Nirkum Vaazhkai Thathuvam Part 1