• ஸ்ரீ பாஷ்யம்
இந்து மதத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரமாண்ட நூல் உருவாக்கப்பட்டது. ஆர்வம், நிதானம், பொறுமை போன்றவைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள இயலும். அளவற்ற நிலையில் உள்ள வேதங்களை தற்போதைய கலிகாலத்து மனிதர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நான்கு பகுதிகளாக வகுத்து கொடுத்தவர் வியாசர் என்னும் பாதராயணர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயங்கச் செய்வதும், பிரம்மம் என்பதை நிரூபித்த வியாசர் வேதங்களின் சாரம் என்னும் கொண்டாடப்படும் உபநிஷத்துக்களில்  உள்ள கருத்துக்களை தொகுத்து பிரம்ம சூத்திரம் என்ற நூலை எழுதினார். இந்த பிரம்ம சூத்திரம் மிக அறிய வாக்கியங்களில் ஆனது என்றாலும் அவற்றில் புதைந்து கிடைக்கும் எண்ணற்ற கருத்துக்களை வெளிப்படுத்த பிரம்ம சூத்திரத்திற்கு பலர் எழுதியுள்ள விளக்க உரைகளில் இராமானுஜர் அருளிய விளக்க உரை இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஸ்ரீ பாஷ்யம்

  • ₹950