• சென்னையின் கதை
மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்றும் பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டு கதைகளை காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைகண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்துபோனாலும் ஏதோ ஒரு மூலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக் கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது. யார் இவர்கள்? மெட்ராஸ் தொடங்கி சென்னை வரையிலான பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கை செலுத்திய சாமானிய மனிதர்கள் தொடங்கி ஆகப்பெரிய ஆளுமைகள் வரை பலரைப் பற்றியும் பதிவு செய்திருக்கும் இந்த நூலில் சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலமும் உருவான கதை வெகு நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்கள் பற்றி அதிகம் அறியப்படாத, பேசப் படாத செய்திகளைக் கொண்டு சென்னையின் வரலாற்றை பதிவு செய்திருக்கும் நூலாசிரியர் பார்த்திபன் பிரபல தனியார் தொலைக் காட்சிகளில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை நகரின் வரலாறு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தினத் தந்தி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னை பற்றி தந்தித் தொலைக்காட்சிக்காக இவர் எடுத்த ஆவணத் தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சென்னையின் கதை

  • ₹666
  • ₹566


Tags: chennayin, kadhai, சென்னையின், கதை, பார்த்திபன், Sixthsense, Publications