• ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்!
கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார் தந்தை. “என் மகன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்... ஃபிசிக்ஸ், கெமிஸ்டரி, மாத்ஸ் குரூப் எடுத்திருக்கான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு அவனுக்கு இன்ஜினீரிங்க நாலு வருஷம் படிக்கணுமாம். அது முடிஞ்சதும் அமெரிக்கா போய் எம்.எஸ். பண்ணனுமாம். மகனைப் படிக்க வைக்க என்கிட்டே பண வசதி இருக்கு... ஆனால், நடைமுறைகளும், வழிமுறைகளும்தான் தெரியலே..!” _ இப்படி ஏராளமான தந்தைகளின் கவலைகளைப் போக்கவும், அமெரிக்கக் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் மாணவர்களின் ஐயப்பாடுகளைக் களையவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. அமெரிக்காவின் கல்வி முறைகளை ஆரம்ப அத்தியாயத்தில் விளக்கி, அமெரிக்க வரலாற்றை சுருக்கமாக விவரித்து, இன்றைய சூழ்நிலையில் அங்கு கல்லூரிகளில் அட்மிஷன் கிடைப்பதற்கு வழிமுறைகளை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் ரேணுகா ராஜா ராவ். அமெரிக்க மண்ணில் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்வது குறித்தும், கல்லூரிப் பேராசிரியர்களிடம் சிபாரிசு கடிதங்கள் பெறுவது பற்றியும், அனுமதி தேர்வுகளை எழுதவேண்டிய முறைகளைப் பற்றியும் ஒரு ‘கைடு’ மாதிரியாக விவரிக்கிறது இந்த நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்!

  • ₹125
  • ₹106


Tags: aam, neengalum, americavil, padikalaam, ஆம்!, நீங்களும், அமெரிக்காவில், படிக்கலாம்!, ரேணுகா ராஜா ராவ், விகடன், பிரசுரம்